பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி, சிறப்பான சேவைகளை ஆற்றுபவர்களைப் பாராட்டும் வகையில், தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் விருது, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இவ்விருதைப் பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் படிவத்தை தமிழக அரசின் www\.tn.gov.in இணையதளத்தில் உள்ள [https://www.tn.gov.in/form-view.php?dep-id=MQ==](https://www.tn.gov.in/form-view.php?dep-id=MQ==\&utm_source=chatgpt.com) என்ற இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், சென்னை சேப்பாக்கத்தில் செயல்படும் ஆதிதிராவிடர் நல இயக்குநரக அலுவலகம் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
Advertisement
மாவட்ட கலெக்டரின் பரிந்துரை மற்றும் ஒப்புதலுடன் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வரும் 10-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாகும். விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது முழு விவரங்களுடன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொண்டுள்ள சிறப்பான சேவைகள், சாதனைகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை இணைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் தகவலை கலெக்டர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.