ஜோ பைடனின் புற்றுநோய் பாதிப்பு தீவிரம் – மகன் ஹன்டர் பைடன் தகவல்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் புற்றுநோய் பாதிப்பு தற்போது தீவிரமடைந்துள்ளதாக அவரது மகன் ஹன்டர் பைடன் தெரிவித்துள்ளார்.ஜோ பைடனுக்கு விதைப்பையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அவர் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலேயே இதற்கான சிகிச்சையை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் துணை ஜனாதிபதியாக இருந்த கமலா ஹாரீஸ், அவருடைய பணிகளை கவனித்து வந்தார். பின்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன், டொனால்டு டிரம்பிடம் தோல்வியடைந்தார்.ஜனாதிபதி பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர், கடந்த மே மாதம் தனக்கு தீவிரமான புற்றுநோய் பாதிப்பு இருப்பதை ஜோ பைடன் வெளிப்படையாக தெரிவித்தார்.
இந்த நிலையில், அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹன்டர் பைடன் உறுதிப்படுத்தியுள்ளார்.
தந்தையின் உடல்நிலை இவ்வாறு மோசமடைந்துள்ளதை பார்ப்பது தங்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாக அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.