Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

ஜனாதிபதி மாளிகை தோட்டம் நாளை மறுதினம் முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுகிறது

ஜனாதிபதி மாளிகை தோட்டம் நாளை மறுதினம் முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுகிறது
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அழகிய தோட்டம், நாளை மறுதினம் முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. 1917-ஆம் ஆண்டு சர் எட்வின் லுட்யன்ஸ் வடிவமைத்த இந்தத் தோட்டம், இங்கிலாந்து மற்றும் முகலாயக் கட்டிடக்கலை பாணிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது. பல்வேறு வகையான மலர் தோட்டங்கள் இடம்பெற்றுள்ள இந்தப் பகுதி, ஜனாதிபதி மாளிகையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.முன்னாள் ஜனாதிபதிகளான அப்துல் கலாம் மற்றும் ராம்நாத் கோவிந்த் ஆகியோரின் பதவிக்காலங்களில், மூலிகைத் தோட்டம், போன்சாய் தோட்டம் மற்றும் ஆரோக்கிய வனம் உள்ளிட்ட கூடுதல் பகுதிகளும்உருவாக்கப்பட்டன.ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலங்களில் இந்தத் தோட்டம் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படும் நிலையில், இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Advertisement
அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை பொதுமக்கள் இந்தத் தோட்டத்தைப் பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தோட்டத்தைப் பார்வையிட விரும்புபவர்கள், visit.rashtrapatibhavan.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு