Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 22 செப்டம்பர் 2026 | 6 புரட்டாசி பராபவ வருடம்

சேலம் ராஜகணபதி கோவிலில் விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்

சேலம் ராஜகணபதி கோவிலில் விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்

சேலம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமையான ராஜகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. ராஜகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சதுர்த்தி தினத்தில் ராஜகணபதி தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் விநாயகர் பல்வேறு அலங்காரங்களுடன் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி, முக்கிய வீதிகளில் உலா வந்தார். விழா நாட்களில் தினமும் ராஜகணபதிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. உற்சவர் விநாயகர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் விநாயகர் தேரில் எழுந்தருளியதைத் தொடர்ந்து, பக்தர்கள் தேரின் வடத்தைப் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது.

Advertisement
முதன்முறையாக திருத்தேரில் எழுந்தருளிய விநாயகப் பெருமானை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். ராஜகணபதி கோவிலில் இதுவரை கொடிமரம் அமைக்கப்படாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு அந்த குறை நீக்கப்பட்டது. கடந்த மாதம் 16-ம் தேதி கருவறைக்கு எதிரே 15 அடி உயரத்தில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து 30-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு மண்டல பூஜையும் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி நாளன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. ராஜகணபதிக்கு 21 வகையான மங்கலப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட கொடிமரத்துக்கு காலை 7 மணிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து முதல்முறையாக விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து விழா நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,270
🥈 Silver ₹260.00
Petrol ₹108.50
🛢️ Diesel ₹100.30
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு