Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 23 செப்டம்பர் 2026 | 7 புரட்டாசி பராபவ வருடம்

சென்னையில் தீவிரமடையும் டெங்கு தடுப்பு பணிகள்: ஒரே நாளில் 1,838 கிலோ தேவையற்ற பொருட்கள் அகற்றம்

சென்னையில் தீவிரமடையும் டெங்கு தடுப்பு பணிகள்: ஒரே நாளில் 1,838 கிலோ தேவையற்ற பொருட்கள் அகற்றம்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களைத் தடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கொசுப்புழுக்கள் உருவாகக்கூடிய டயர்கள் மற்றும் பயன்பாடின்றி கிடந்த பல்வேறு பொருட்கள் மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டுள்ளன. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
குறிப்பாக, கொசுப்புழுக்கள் உருவாகும் வாய்ப்புள்ள டயர்கள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் கண்டறியப்பட்டு உடனடியாக அகற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்று ஒரே நாளில் 500.9 கிலோ எடையுள்ள பயன்படுத்தப்பட்ட டயர்களும், 1,337.15 கிலோ எடையுள்ள தேவையற்ற மற்றும் பயன்படுத்தப்படாத பொருட்களும் கண்டறியப்பட்டு மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டன. மொத்தமாக ஒரே நாளில் 1,838.05 கிலோ எடையிலான பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,135
🥈 Silver ₹255.00
Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு