Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 23 செப்டம்பர் 2026 | 7 புரட்டாசி பராபவ வருடம்

செங்கல்பட்டு: சாலை தடுப்புச்சுவரில் ஆம்னி பஸ் மோதி விபத்து - அதிர்ச்சி சம்பவம்

செங்கல்பட்டு: சாலை தடுப்புச்சுவரில் ஆம்னி பஸ் மோதி விபத்து - அதிர்ச்சி சம்பவம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சாலை தடுப்புச்சுவரில் ஆம்னி பஸ் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் பயணம் செய்த 28 பேரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கோவையில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அந்த பஸ்சில் 28 பயணிகள் இருந்தனர். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே உள்ள மாமண்டூர் பகுதியில் பஸ் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

Advertisement
இதையடுத்து சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவரில் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் எந்தவித காயமும் இன்றி தப்பினர். இந்த விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,135
🥈 Silver ₹255.00
Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு