சூர்யா நடிக்கும் “சீன்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகர்கள் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘ஆவேஷம்’ படத்துக்குப் பிறகு ஜித்து மாதவன் இயக்கும் இப்படத்தில் சூர்யா காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட், ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படம், சூர்யாவின் இரண்டாவது தயாரிப்பு நிறுவனமான ழகரம் புரொடக்ஷன் சார்பிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 6ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், படத்தின் முதல் பாடலான ‘ஆத்தி யார்ரா இவ’ அக்டோபர் 8ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சுஷின் ஷ்யாம் இசையில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘சீன்’ வெளியாக இருப்பதால், இப்படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நவம்பர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘சீன்’ படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.