Skip to main content
🌤️ —°C
சனி | 15 ஆகஸ்ட் 2026 | 30 ஆடி பராபவ வருடம்

சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் விஜய்யின் பெற்றோர், நடிகை திரிஷா பங்கேற்பு

சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் விஜய்யின் பெற்றோர், நடிகை திரிஷா பங்கேற்பு
இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் முதல் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசின் சார்பில் நடைபெற்ற முதல் சுதந்திர தின விழா சென்னை கோட்டையில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் இன்று காலை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார். மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே அவருக்கு காவல்துறையினர் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பின் மூலம் வரவேற்பு அளித்தனர்.அதன்பிறகு கோட்டைக்குச் சென்ற விஜய், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் திறந்த ஜீப்பில் சென்று அணிவகுப்பை பார்வையிட்டார். தொடர்ந்து காலை 8.45 மணியளவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தினத்திற்கு மரியாதை செலுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய்யின் பெற்றோரான எஸ்.ஏ.
Advertisement
சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் ஆகியோரும் கலந்துகொண்டனர். நடிகை திரிஷாவும் சிறப்பு விருந்தினராக விழாவில் பங்கேற்றார்.விழா அரங்கின் முதல் வரிசையில் விஜய்யின் பெற்றோருக்கு அருகில் நடிகை திரிஷாவுக்கும் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. காவல்துறையினரின் அணிவகுப்பை முதல்-அமைச்சர் விஜய் பார்வையிட்டபோது அவர் சல்யூட் அடித்தார். அந்த நேரத்தில் திரிஷாவும் அவரைப் பார்த்து சல்யூட் அடித்தார்.விழா நிறைவடைந்த பிறகு முதல்-அமைச்சர் விஜய் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்போது, அவரது பெற்றோரும் நடிகை திரிஷாவும் கையசைத்து அவரை வழியனுப்பி வைத்தனர். சுதந்திர தின விழாவில் திரிஷா பங்கேற்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு