Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 30 செப்டம்பர் 2026 | 14 புரட்டாசி பராபவ வருடம்

தாராபுரத்தில் 2-ம் தேதி மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்

தாராபுரத்தில் 2-ம் தேதி மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்

தாராபுரம் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 2-ம் தேதி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக மு.க.ஸ்டாலின் வரும் 1-ம் தேதி கோவை செல்கிறார். அங்கு இரவு தங்கும் அவர், மறுநாள் 2-ம் தேதி காரில் தாராபுரம் தொகுதிக்குச் செல்கிறார். அங்கு ரோடு ஷோவில் பங்கேற்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். தொடர்ந்து மாலையில் தாராபுரத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

Advertisement
இந்தக் கூட்டத்தில் தி.மு.க.வின் தோழமைக் கட்சித் தலைவர்களும் பங்கேற்று உரையாற்றும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தாராபுரம் பிரசாரத்தை முடித்த பிறகு, மறுநாள் 3-ம் தேதி மதுராந்தகம் செல்லும் மு.க.ஸ்டாலின், அங்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு பேசுகிறார். இதையொட்டி, மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரசாரப் பயணத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,640
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு