சென்னை அருகே புழலில் அமைந்துள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 91-வது பிறந்தநாளை முன்னிட்டு கைப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 27 பள்ளிகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. சென்னை வாழ் நாடார்கள் சங்கப் பொருளாளர் கே.எம். செல்லதுரை விழாவுக்குத் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பி.என். அசோக்குமார் வரவேற்புரையாற்றினார். அறக்கட்டளைப் பொருளாளர் ராஜாமணி முருகேச பாண்டியன், துணைத் தலைவர் சிற்றம்பலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழ்நாடு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்.ஜே.
Advertisement
ஜான் கென்னடி, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினார். முதல் பரிசாக தங்கக் கேடயத்துடன் ரொக்கப் பரிசும், இரண்டாம் பரிசாக வெள்ளிக் கேடயத்துடன் ரொக்கப் பரிசும், மூன்றாம் பரிசாக வெண்கலக் கேடயத்துடன் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன. சென்னை வாழ் நாடார்கள் சங்கத் தலைவர் டி. தங்கமுத்து, பொதுச்செயலாளர் ஆர். செல்வகுமார், செயலாளர் டாக்டர் சி. ஆறுமுகசாமி, கல்விக்குழு உறுப்பினர் வி.டி.சி. செல்வம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விழாவின் நிறைவில் பள்ளியின் துணை முதல்வர் ராஜராஜேஸ்வரி நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் சதீஷ் ஒருங்கிணைத்தார். ஆசிரியைகள் பிரவீனா, ஜாய் ஞானபுஸ்பம் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.