Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 29 அக்டோபர் 2026 | 12 ஐப்பசி பராபவ வருடம்

சிறையில் இருந்து கைதிகள் தப்ப முயன்றால் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவா

சிறையில் இருந்து கைதிகள் தப்ப முயன்றால் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவா

தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 விசாரணைக் கைதிகள் ஒரே நேரத்தில் தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய கைதிகளை விரைந்து பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய இருவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்டவர்களிடமும், சிறையில் உள்ள மற்ற கைதிகளிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், தப்பிச் செல்வதற்காக மூன்று நாட்களாகத் திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பணியில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி சிறைக் காவலர்கள் 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தேனி மாவட்ட சிறைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணியாற்றும் சிறைக் காவலர்களிடம் சுமார் ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தப்பியோடிய கைதிகள் அனைவரும் விரைவில் பிடிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். சிறைகளில் பாதுகாப்பை அதிகரிக்க அதிரடி நடவடிக்கைகள்? தேனி மற்றும் புழல் சிறைகளில் கைதிகள் தப்பிய சம்பவங்களைத் தொடர்ந்து, சிறைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் சிறைத்துறை டிஜிபி பல்வேறு புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement
அதன்படி, சிறைகளில் உள்ள கண்காணிப்புக் கோபுரங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசாரைப் பணியில் அமர்த்தவும், கைதிகள் தப்ப முயற்சிப்பது அல்லது சிறைக் காவலர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற சூழல்கள் உருவானால் துப்பாக்கிச் சூடு நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதிகள் தப்பிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டால், அப்போதைய சூழலுக்கு ஏற்ப அவர்களைச் சுட்டுப் பிடிப்பதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை வாக்கி டாக்கி, பைனாகுலர் உள்ளிட்ட கருவிகளுடன் கண்காணிப்புக் கோபுரங்களில் பணியாற்றி வந்த காவலர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகச் சிறைகளில் பாதுகாப்பு தொடர்பான தணிக்கைப் பணிகள் நிறைவடைந்த பின்னர், இந்த நடவடிக்கைகள் குறித்த அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு