Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
செவ்வாய் | 01 செப்டம்பர் 2026 | 16 ஆவணி பராபவ வருடம்

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி

பிரபல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த 2011ஆம் ஆண்டு டெல்லியில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி நாடு முழுவதும் மட்டுமின்றி உலக அளவிலும் கவனம் பெற்றவர் அன்னா ஹசாரே. அவரது போராட்டத்தைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி உருவாகும் சூழல் ஏற்பட்டது. பின்னர் அந்தக் கட்சி டெல்லியில் ஆட்சியை அமைத்ததுடன், தேசிய கட்சியாகவும் வளர்ந்தது. தற்போது பஞ்சாப்பிலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.அன்னா ஹசாரே தொடர்ந்து பல்வேறு சமூகப் பிரச்சினைகள் மற்றும் மாணவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.இந்நிலையில், 89 வயதான அன்னா ஹசாரே மராட்டிய மாநிலம் அகில்யாநகர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான ராலேகான் சித்தி கிராமத்தில் வசித்து வந்தார்.

Advertisement
நேற்று அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, முதற்கட்டமாக அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.பின்னர், மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அன்னா ஹசாரேவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு