Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 16 அக்டோபர் 2026 | 30 புரட்டாசி பராபவ வருடம்

ஜனாதிபதி முர்மு உடன் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் சந்திப்பு

ஜனாதிபதி முர்மு உடன் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் சந்திப்பு

ஜனாதிபதி திரவுபதி முர்முவை பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் இன்று சந்தித்து பேசினார்.ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற நிதின் நபின், ஜனாதிபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பு தொடர்பாக அவர் வெளியிட்ட தகவலில், ஜனாதிபதியை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனத் தெரிவித்துள்ளார்.மேலும், ஜனாதிபதி முர்முவின் எளிமையான அணுகுமுறையும், நாட்டுக்காக பணியாற்றுவதில் அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பும் தங்களுக்கு பல முக்கிய பாடங்களை அளிப்பதாக நிதின் நபின் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதியின் வழிகாட்டுதல், நாட்டுக்கும் சமூகத்துக்கும் முன்னேற்றம் ஏற்படும் வகையில் தொடர்ந்து பணியாற்றுவதற்கான புதிய ஆற்றலையும் ஊக்கத்தையும் வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,515
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு