சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
01 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 01 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி

பிரபல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த 2011ஆம் ஆண்டு டெல்லியில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி நாடு முழுவதும் மட்டுமின்றி உலக அளவிலும் கவனம் பெற்றவர் அன்னா ஹசாரே. அவரது போராட்டத்தைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி உருவாகும் சூழல் ஏற்பட்டது. பின்னர் அந்தக் கட்சி டெல்லியில் ஆட்சியை அமைத்ததுடன், தேசிய கட்சியாகவும் வளர்ந்தது. தற்போது பஞ்சாப்பிலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.அன்னா ஹசாரே தொடர்ந்து பல்வேறு சமூகப் பிரச்சினைகள் மற்றும் மாணவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.இந்நிலையில், 89 வயதான அன்னா ஹசாரே மராட்டிய மாநிலம் அகில்யாநகர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான ராலேகான் சித்தி கிராமத்தில் வசித்து வந்தார். நேற்று அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, முதற்கட்டமாக அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.பின்னர், மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அன்னா ஹசாரேவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.