Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 04 செப்டம்பர் 2026 | 19 ஆவணி பராபவ வருடம்

சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம்: 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம்: 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

சென்னையில் சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் ஒருங்கிணைந்த நவீன நிர்வாக வளாகம் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதம் நடைபெறுகிறது. இதற்கிடையே, சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.அதன்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் உலகத் தரத்தில் தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் உருவாக்கப்பட உள்ளது. இதில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்குகள், நவீன விளையாட்டு உபகரணங்கள், உயர்தர செயல்திறன் பயிற்சி மையம், அறிவியல் மற்றும் விளையாட்டு மருத்துவ மையங்கள் ஆகியவை அமைக்கப்படும். மேலும், விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தங்குமிட வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் அதிகளவில் பதக்கங்களை வெல்லும் வகையில் இந்த ஒருங்கிணைந்த விளையாட்டு மையம் செயல்படும். குறிப்பாக, ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லும் திறன் கொண்ட வீரர்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்தப்படும்.மேலும், தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். சர்வதேச தரத்திலான கார் பந்தயத் தடம், அதற்குத் தேவையான நவீன உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி வசதிகள் இந்த நகரில் உருவாக்கப்படும்.

Advertisement
Formula 1, Formula 2, Formula 3, Formula 4 உள்ளிட்ட சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்துவதற்கான கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படும்.இளைஞர்களிடம் உள்ள மோட்டார் ஸ்போர்ட்ஸ் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் வழங்கப்படும். இதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டியிடக்கூடிய வீரர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். உலகத் தரத்திலான மோட்டார் வாகன பந்தய அரங்குகள் அமைப்பதன் மூலம் சுற்றுலா, சிறப்பு வாகன உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் இடம்பெறும் புதிய நிர்வாக வளாகம் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வளாகத்தில் நவீன தீயணைப்பு ஏற்பாடுகள், மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தக்கூடிய வசதிகள் மற்றும் பசுமைக் கட்டட தரநிலைகளுக்கு ஏற்ற அம்சங்கள் இடம்பெறும். மேலும், போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்களுக்கான சேவை மையங்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான நவீன வசதிகளும் அமைக்கப்பட உள்ளன.அனைத்து அரசுத் துறைகளையும் ஒரே நிர்வாக வளாகத்திற்குள் கொண்டு வந்து ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்தும் வகையில் இந்த புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படும்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு