Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 22 அக்டோபர் 2026 | 5 ஐப்பசி பராபவ வருடம்

சென்னையில் 1.50 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னையில் 1.50 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம், கடந்த ஆகஸ்ட் 11 முதல் அக்டோபர் 21, 2026 வரை மொத்தம் 1,50,303 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ரேபிஸ் இல்லாத சென்னையை உருவாக்க நடவடிக்கை தமிழகத்தில் வெறிநாய்க்கடி நோயைத் தடுக்கும் வகையில், நோய்ப் பாதிப்பிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கவும், ரேபிஸ் பாதிப்பில்லாத சென்னையை உருவாக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதுடன், உடல் மற்றும் வெளிப்புற ஒட்டுண்ணிகளை நீக்கும் மருந்துகளை வழங்கும் சிறப்பு முகாம் கடந்த ஆகஸ்ட் 11, 2026 அன்று தொடங்கப்பட்டது.

மண்டல வாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்கள் இந்தத் திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சியின் பல்வேறு மண்டலங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்ட தெருநாய்களின் எண்ணிக்கை விவரம்:

திருவொற்றியூர் – 12,313 மணலி – 7,200 மாதவரம் – 15,038 தண்டையார்பேட்டை – 12,477 ராயபுரம் – 8,598 திரு.வி.க. நகர் – 13,849 அம்பத்தூர் – 21,844 அண்ணாநகர் – 11,895 தேனாம்பேட்டை – 7,782 கோடம்பாக்கம் – 10,131 ஆலந்தூர் – 4,343 பெருங்குடி – 12,752 இதற்கிடையில், வளசரவாக்கம், அடையாறு, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களிலும் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை வளசரவாக்கத்தில் 3,943 நாய்களுக்கும், அடையாறில் 3,985 நாய்களுக்கும், சோழிங்கநல்லூரில் 4,153 நாய்களுக்கும் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

பொதுமக்களுக்கு மாநகராட்சி வேண்டுகோள் ஆகஸ்ட் 11 முதல் அக்டோபர் 21, 2026 வரை நடைபெற்ற இந்தப் பணிகளின் மூலம், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மொத்தம் 1,50,303 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசியும், அக மற்றும் புற ஒட்டுண்ணிகளை அகற்றுவதற்கான மருந்துகளும் செலுத்தப்பட்டுள்ளன. ‘ரேபிஸ் இல்லாத சென்னை’ என்ற இலக்கை அடைய பொதுமக்கள், செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தகவலை சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,490
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு