Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 07 நவம்பர் 2026 | 21 ஐப்பசி பராபவ வருடம்

சந்தானம் நடித்த “லவ் பைட்” படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்

சந்தானம் நடித்த “லவ் பைட்” படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்

நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படமான 'லவ் பைட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக ரசிகர்களிடம் பிரபலமான சந்தானம், தற்போது கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர், தொடர்ந்து 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', 'இனிமே இப்படித்தான்', 'சக்கப்போடு போடு ராஜா', 'தில்லுக்கு துட்டு' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வரிசையில், தற்போது அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படத்தில் சந்தானம் நடித்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தை தயாரித்துள்ளார். இதில் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், ஆனந்த்ராஜ், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜாம்பி கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு திரில்லர் மற்றும் நகைச்சுவை அம்சங்களுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement
இதற்கு 'லவ் பைட்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 'லவ் பைட்' திரைப்படம் வரும் டிசம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வித்தியாசமான ஜாம்பி கதையுடன் நகைச்சுவையும் கலந்துள்ள இப்படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் தொடர்பான அறிவிப்புகளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், படத்தின் முதல் பார்வை போஸ்டர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு 'லவ் பைட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு சந்தானம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு