Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
செவ்வாய் | 08 செப்டம்பர் 2026 | 23 ஆவணி பராபவ வருடம்

தமிழக சட்டசபையில் 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் கடந்த ஆகஸ்டு 5-ந் தேதியும், வேளாண் பட்ஜெட் 6-ந் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆகஸ்டு 7, 10, 11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றன. ஆகஸ்டு 12-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் விவாதங்களுக்கு பதிலளித்து பேசினர். இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்டு 17-ந் தேதி முதல் பல்வேறு துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று சட்டசபையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளுக்கான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசினார். அப்போது, கட்சி நிதி பெற்ற விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி மீது முதல்-அமைச்சர் விஜய் பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆவேசமாக பேசினார்.

Advertisement
இந்த நிலையில், சட்டசபையில் இன்று போக்குவரத்து, பொதுத்துறை, நிதித்துறை, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை, மாநில சட்டமன்றம், ஓய்வூதியங்கள் மற்றும் பிற ஓய்வுக்கால நலன்கள் உள்ளிட்ட துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.விவாதத்தின் முடிவில் சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பதிலுரை வழங்க உள்ளனர். இந்த விவாதங்கள் மதியம் நிறைவடைந்த பிறகு சட்டசபையின் பிற அலுவல்கள் நடைபெறும்.இதையடுத்து, தமிழக சட்டசபையின் மானியக் கோரிக்கை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு