Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

கேரளா இனி ‘கேரளம்’ என அழைக்கப்படும்? பெயர் மாற்ற மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

கேரளா இனி ‘கேரளம்’ என அழைக்கப்படும்? பெயர் மாற்ற மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான சட்ட மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் டெல்லி மாணவர்கள் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட தடியடி, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை தொடர்பான முறைகேடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே, மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய், கேரள மாநிலத்தின் பெயர் மாற்றம் தொடர்பான ‘கேரள (பெயர் மாற்றம்) மசோதா, 2016’-ஐ நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார்.கேரள மாநிலத்தின் பெயரை மாற்றுவது தொடர்பாக, கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் கேரள அரசால் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கேரளா என்ற பெயர் கேரளம் என மாற்றப்பட உள்ளது.மசோதா குறித்து பேசிய நித்யானந்த ராய், கேரள மாநிலத்தின் பெயரை மாற்றுவதுடன், அரசியல் சாசனத்தின் தொடர்புடைய பிரிவுகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும் இந்த மசோதா வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து, கேரள மாநிலத்தின் பெயர் மாற்றத்துக்கான மசோதாவுக்கு மக்களவை இன்று ஒப்புதல் அளித்தது.
Advertisement
இதன் மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.இதனிடையே, தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழக (திருத்த) மசோதா, 2026-ம் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய இணை மந்திரி மொஹல் முரளிதர் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். பின்னர் மசோதா பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் கையை உயர்த்துமாறு மக்களவை தலைவர் கிருஷ்ண பிரசாத் தென்னட்டி கேட்டுக்கொண்டார். இதையடுத்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு