Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 05 அக்டோபர் 2026 | 19 புரட்டாசி பராபவ வருடம்

கூட்டணி கட்சியினரே தவெகவை விமர்சிக்கும் நிலை உள்ளது - கனிமொழி

கூட்டணி கட்சியினரே தவெகவை விமர்சிக்கும் நிலை உள்ளது - கனிமொழி

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, தவெக குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது பேசிய அவர், நியாயத்திற்கும் உண்மைக்கும் மக்கள் வெற்றி அளிப்பார்கள் என்றும், மக்களை ஏமாற்றி ஜனநாயகத்தை பாதிக்கும் செயல்களில் ஈடுபடும் தவெகவுக்கு தேர்தல் மூலம் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தவெக இடம்பெற்றுள்ள கூட்டணியில் உள்ளவர்களே அந்தக் கட்சியை விமர்சிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கனிமொழி கூறினார். நேர்மையான மற்றும் தூய்மையான ஆட்சியை நடத்துவதாக வெறும் வார்த்தைகளில் கூறுவது மட்டும் போதாது என்றும், செயல்பாடுகளிலும் அது வெளிப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் கிடைக்கவில்லை என்றும், பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் கனிமொழி குற்றம்சாட்டினார்.

Advertisement
குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வளர்ச்சிக்கான திட்டங்களும் தொழில் முதலீடுகளும் இல்லை என்றும் அவர் விமர்சித்தார். மேலும், தங்களை தூய்மையான சக்தி என கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றுவதாகவும், தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும் அளவுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்பது குறித்தும் மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும் கனிமொழி தெரிவித்தார். தேர்தல் நேரங்களில் அதிகமாக பிரசாரம் செய்யாத ஒரு முதலமைச்சரே தற்போது வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்திருப்பதை சுட்டிக்காட்டிய கனிமொழி, இதன் மூலம் விஜய்க்கு தேர்தல் குறித்த அச்சம் இருப்பது தெளிவாகிறது என்றும் கூறினார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு