Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 20 அக்டோபர் 2026 | 3 ஐப்பசி பராபவ வருடம்

கும்பக்கரை அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கும்பக்கரை அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவி, இயற்கை அழகுடன் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. மலைப்பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த அருவிக்கு தினந்தோறும் ஏராளமானோர் வருகை தருகின்றனர். குறிப்பாக, கொடைக்கானலுக்கு வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளித்து மகிழ்வது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானல், வட்டக்கானல் மற்றும் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது.

Advertisement
இதன் காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு நீடித்தது. தற்போது நான்கு நாட்களுக்குப் பிறகு நீர்வரத்து சீராகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் மீண்டும் அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,535
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு