கும்பக்கரை அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
20 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 20 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கும்பக்கரை அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கும்பக்கரை அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவி, இயற்கை அழகுடன் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. மலைப்பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த அருவிக்கு தினந்தோறும் ஏராளமானோர் வருகை தருகின்றனர். குறிப்பாக, கொடைக்கானலுக்கு வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளித்து மகிழ்வது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானல், வட்டக்கானல் மற்றும் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு நீடித்தது. தற்போது நான்கு நாட்களுக்குப் பிறகு நீர்வரத்து சீராகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் மீண்டும் அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.