Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 20 அக்டோபர் 2026 | 3 ஐப்பசி பராபவ வருடம்

ராமநாதபுரம் சேதுபதி அரண்மனையில் பாரம்பரிய பொம்மலாட்டம்: ஆர்வத்துடன் ரசித்த பொதுமக்கள்

ராமநாதபுரம் சேதுபதி அரண்மனையில் பாரம்பரிய பொம்மலாட்டம்: ஆர்வத்துடன் ரசித்த பொதுமக்கள்

ராமநாதபுரம் சேதுபதி அரண்மனையில் நவராத்திரி விழாவையொட்டி நடைபெற்ற பாரம்பரிய பொம்மலாட்ட நிகழ்ச்சிக்கு ஏராளமானோர் வருகை தந்து கண்டு மகிழ்ந்தனர். ராமநாதபுரம் சேதுபதி மன்னர் அரண்மனையில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நவராத்திரி மற்றும் ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு, வரலாற்றுப் புகழ்பெற்ற ராமலிங்க விலாசம் மண்டபத்தில் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. நூற்றாண்டைக் கடந்த கலை மரபு கடந்த 1900-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அப்போதைய சேதுபதி மன்னர் கும்பகோணத்தில் இருந்து பொம்மலாட்டக் கலைஞர்களை வரவழைத்து இந்த நிகழ்ச்சியைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அன்றிலிருந்து பல தலைமுறைகளாக அரண்மனை விழாக்களில் பொம்மலாட்டக் கலைஞர்கள் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர். இந்த ஆண்டும் பாரம்பரியக் கதைகளுடன் சமூக விழிப்புணர்வு கருத்துகளையும் பொம்மலாட்டம் மூலம் கலைஞர்கள் நாடக வடிவில் எடுத்துரைத்தனர்.

Advertisement
அவர்களின் கலைநயமிக்க நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வம் அலைபேசிகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த இன்றைய காலகட்டத்திலும், பாரம்பரிய பொம்மலாட்டத்தைக் காண சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் அரண்மனை வளாகத்தில் திரண்டனர். நிகழ்ச்சியை ஆர்வத்துடன் பார்த்து கலைஞர்களின் திறமையைப் பாராட்டினர். பாரம்பரியக் கலையைப் பாதுகாக்க அரசுக்கு கோரிக்கை நிகழ்ச்சியைக் கண்ட சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும், அழிவின் விளிம்பில் உள்ள பாரம்பரிய பொம்மலாட்டக் கலையைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், இந்தக் கலையை பள்ளி மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், பொம்மலாட்டக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாதந்தோறும் நிதியுதவி வழங்குவதுடன், கலைமாமணி உள்ளிட்ட அரசு விருதுகள் மூலம் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,535
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு