Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 20 அக்டோபர் 2026 | 3 ஐப்பசி பராபவ வருடம்

ஈரோடு: மனைவியைக் கொலை செய்து இயற்கை மரணம் என நாடகமாடிய கணவன் கைது

ஈரோடு: மனைவியைக் கொலை செய்து இயற்கை மரணம் என நாடகமாடிய கணவன் கைது

ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே மது போதையில் மனைவியைத் தாக்கிக் கொன்றதாகக் கூறப்படும் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். மனைவியின் உயிரிழப்பை இயற்கையான மரணம் போலச் சித்தரித்து, யாருக்கும் தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயன்றபோது அவரது செயல் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகிலுள்ள கொங்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி ராஜேஸ்வரி. நாகராஜுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு நாகராஜ் அதிக மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும் ராஜேஸ்வரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தீவிரமடைந்த நிலையில், ஆத்திரத்தில் நாகராஜ் மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயமடைந்த ராஜேஸ்வரி, வீட்டின் அருகிலிருந்த ஆட்டுக் கொட்டகையில் உயிரிழந்தார். மனைவி இறந்ததை அறிந்த நாகராஜ், போலீசாரிடம் சிக்காமல் இருக்க அவரது மரணத்தை இயற்கையான உயிரிழப்பாகக் காட்ட முயன்றதாகத் தெரிகிறது.

Advertisement
இதற்காக ஞாயிற்றுக்கிழமை அதிகாலைக்குள் யாருக்கும் தெரியாமல் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை அவசரமாக மேற்கொண்டுள்ளார். நாகராஜின் இந்த நடவடிக்கைகளும், ராஜேஸ்வரியின் திடீர் மரணமும் அப்பகுதி மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தின. இதையடுத்து, அவர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராஜேஸ்வரியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நாகராஜிடம் விசாரணை நடத்தியபோது, மது போதையில் மனைவியைத் தாக்கிக் கொன்றுவிட்டு, அதை மறைக்க முயன்றதாக அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து நாகராஜை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் கொங்கம்பாளையம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,535
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு