மும்பையில் பிரசித்தி பெற்ற லால்பாக்சா ராஜா விநாயகர் கோவிலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்தார். மும்பையில் உள்ள லால்பாக்சா ராஜா பந்தலுக்கு ஷாருக்கான் தனது மனைவி கௌரி கான், மகள் சுஹானா கான் மற்றும் மேலாளர் பூஜா டட்லானி ஆகியோருடன் சென்றார். அவரது வருகையை அறிந்த ஏராளமான பக்தர்களும் ரசிகர்களும் அங்கு திரண்டதால், அவருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில் ஷாருக்கான் நீல நிற குர்தாவும், சுஹானா பச்சை நிற பாரம்பரிய உடையும் அணிந்திருந்தனர். கௌரி கான் மஞ்சள் நிற உடையில் வந்திருந்தார். நடப்பு கணேஷோத்சவத்தையொட்டி பல பாலிவுட் பிரபலங்களும் லால்பாக்சா ராஜாவை தரிசித்துள்ளனர். பிருத்விராஜ் சுகுமாரன், ரித்தேஷ் தேஷ்முக், ஜெனிலியா தேஷ்முக், ஷில்பா ஷெட்டி, சித்தார்த் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் இதில் அடங்குவர்.
Advertisement
இதனிடையே, வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடியது குறித்தும் ஷாருக்கான் ஏற்கனவே ரசிகர்களிடம் பேசியுள்ளார். எக்ஸ் தளத்தில் நடைபெற்ற AskSRK நிகழ்வில் ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது, தனது குடும்பத்தின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை அவர் பகிர்ந்துகொண்டார். லால்பாக்சா ராஜா பந்தலில் தரிசனம் செய்துகொண்டிருந்தபோது ஷாருக்கானின் கண்ணில் ஏதோ விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் அருகில் இருந்த தனது மேலாளர் பூஜா டட்லானியின் துப்பட்டாவை பயன்படுத்தி முகத்தைத் துடைத்தார். அப்போது அவரது மனைவி கௌரி மற்றும் மகள் சுஹானா அருகிலேயே இருந்தனர். மேலாளரின் துப்பட்டாவை ஷாருக்கான் பயன்படுத்திய இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.