Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 02 அக்டோபர் 2026 | 16 புரட்டாசி பராபவ வருடம்

கீர்த்தி சுரேஷின் ‘சத்யவான் சாவித்திரி’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

கீர்த்தி சுரேஷின் ‘சத்யவான் சாவித்திரி’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞராக நடித்துள்ளார். அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதிடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடித்திருக்கிறார். பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர். படத்திற்கு சாம். சி.எஸ். இசையமைத்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘ரிப்பிப்பீ’ ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.

Advertisement
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு பின்னர் நிறைவடைந்தது. தொடர்ந்து வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து, படம் ஜூலை 24-ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த வெளியீடு தாமதமானது. இந்நிலையில், ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படம் நவம்பர் 20-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. வித்தியாசமான கதைக்களத்துடன் கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் கூட்டணி அமைந்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,775
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு