காலை உணவு திட்டத்தில் கோவில்பட்டி கடலை மிட்டாய் இடம்பெற வேண்டும்: உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் கரிசல் மண் நிறைந்த பகுதிகளாக உள்ளன. இங்கு விளையும் நிலக்கடலைக்கு இயற்கையாகவே இனிப்பு சுவை இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலக்கடலையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கோவில்பட்டி கடலை மிட்டாய் உலக அளவில் புகழ்பெற்றதாக உள்ளதுகோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதி புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இந்தியாவில் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மாலத்தீவு, லண்டன், அமெரிக்கா, பஹ்ரைன், கத்தார், குவைத் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் இங்கு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.கோவில்பட்டியில் சுமார் 120 இடங்களில் குடிசைத் தொழில் அடிப்படையில் கடலை மிட்டாய் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில்பட்டி கடலை மிட்டாயை தமிழக அரசின் சத்துணவு மற்றும் காலை உணவு திட்டங்களில் சேர்க்க வேண்டும் என்பதும், வந்தே பாரத் ரெயில்களின் உணவுப் பட்டியலில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதும் உற்பத்தியாளர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.இதுதொடர்பாக கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்க செயலாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வந்தே பாரத் ரெயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் கடலை மிட்டாய் வழங்கப்படுகிறது.