காலை உணவு திட்டத்தில் கோவில்பட்டி கடலை மிட்டாய் இடம்பெற வேண்டும்: உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
09 Aug 2026, ஞாயிறு | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 09 Aug 2026, Sunday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

காலை உணவு திட்டத்தில் கோவில்பட்டி கடலை மிட்டாய் இடம்பெற வேண்டும்: உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

காலை உணவு திட்டத்தில் கோவில்பட்டி கடலை மிட்டாய் இடம்பெற வேண்டும்: உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் கரிசல் மண் நிறைந்த பகுதிகளாக உள்ளன. இங்கு விளையும் நிலக்கடலைக்கு இயற்கையாகவே இனிப்பு சுவை இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலக்கடலையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கோவில்பட்டி கடலை மிட்டாய் உலக அளவில் புகழ்பெற்றதாக உள்ளதுகோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதி புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இந்தியாவில் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மாலத்தீவு, லண்டன், அமெரிக்கா, பஹ்ரைன், கத்தார், குவைத் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் இங்கு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.கோவில்பட்டியில் சுமார் 120 இடங்களில் குடிசைத் தொழில் அடிப்படையில் கடலை மிட்டாய் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில்பட்டி கடலை மிட்டாயை தமிழக அரசின் சத்துணவு மற்றும் காலை உணவு திட்டங்களில் சேர்க்க வேண்டும் என்பதும், வந்தே பாரத் ரெயில்களின் உணவுப் பட்டியலில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதும் உற்பத்தியாளர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.இதுதொடர்பாக கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்க செயலாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வந்தே பாரத் ரெயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் கடலை மிட்டாய் வழங்கப்படுகிறது. ஆனால், தற்போது வடமாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் தயாரிக்கும் கடலை மிட்டாயே வழங்கப்பட்டு வருகிறது என்றார்.மத்திய அரசால் புவிசார் குறியீடு வழங்கப்பட்ட கோவில்பட்டி கடலை மிட்டாய் உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் வந்தே பாரத் ரெயில்களின் உணவுப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதன் மூலம் கோவில்பட்டி கடலை மிட்டாயின் சிறப்பு, வரலாறு மற்றும் தரம் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.மேலும், பள்ளிகளில் செயல்படுத்தப்படும் தமிழக அரசின் சத்துணவு திட்டம் மற்றும் காலை உணவு திட்டத்திலும், அரசு நடத்தும் சமுதாய வளைகாப்பு விழாக்களிலும் சுவையும் சத்தும் நிறைந்த கோவில்பட்டி கடலை மிட்டாயை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.