காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் உறுதி; லவ்லினா போர்கைஹைன் அரையிறுதிக்கு முன்னேற்றம்
கிளாஸ்கோ: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் தொடக்க விழா நடைபெறுவதற்கு முன்பே, இந்தியாவுக்கு முதல் பதக்கம் உறுதியாகியுள்ளது. குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கைஹைன் மகளிர் 75 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை கிளாஸ்கோவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் 124 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். போட்டியின் தொடக்க விழா இன்று இரவு நடைபெற உள்ள நிலையில், இந்திய அணிக்கு முதல் பதக்கம் உறுதியானது.அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒலிம்பிக் பதக்க வீராங்கனையான லவ்லினா போர்கைஹைன், மகளிர் 75 கிலோ எடைப்பிரிவில் 'பை' (Bye) பெற்றதால் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
இதன் மூலம் அவருக்கு வெண்கலப் பதக்கம் உறுதியாகியுள்ளது.அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினால், லவ்லினாவுக்கு குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கம் உறுதியாகும். இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றால் தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது.