காமன்வெல்த் 2026: மும்முறை தாண்டுதலில் தமிழக வீரர்கள் அசத்தல்
காமன்வெல்த் 2026 போட்டித் தொடரில் இந்தியாவின் பதக்கப் பயணம் தொடர்ந்து வருகிறது. ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் இறுதிச் சுற்றில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டு பதக்கங்களை பெற்றுள்ளனர்.இந்தப் போட்டியில் இந்திய வீரர் பிரவீன் சித்ரவேல் 16.58 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
மற்றொரு இந்திய வீரரான செல்வ பிரபு திருமாறன் 16.52 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.பதக்கம் வென்ற இரு வீரர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.