Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 07 நவம்பர் 2026 | 21 ஐப்பசி பராபவ வருடம்

கலைப்பயணத்தில் மேலும் பல சாதனைகள் படைக்க கமல்ஹாசனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

கலைப்பயணத்தில் மேலும் பல சாதனைகள் படைக்க கமல்ஹாசனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், திரையுலகில் தனது கலைத்திறன் மூலம் கலைமொழியை வளப்படுத்தி வருவதோடு, அரசியல் களத்திலும் தமிழ்மொழியின் பெருமை, மாநில உரிமைகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் தனது கருத்துகளைத் தொடர்ந்து முன்வைத்து வருபவர் கமல்ஹாசன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
மேலும், மாநிலங்களவை உறுப்பினரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு தனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அவர், கலை மீதான ஆர்வத்திலும் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதிலும் என்றும் இளமைத் துடிப்புடன் செயல்பட்டு வரும் அவர், தனது கலைப்பயணத்தில் இன்னும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என வாழ்த்தியுள்ளார். அதேபோல், அறிவார்ந்த சிந்தனைகள் மற்றும் அரசியல் செயல்பாடுகள் வாயிலாக சமூகத்திற்கு மேலும் சிறப்பான பங்களிப்புகளை வழங்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு