கர்நாடகா: கருப்பை வாய் புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு அதிரடி நடவடிக்கை!
கர்நாடக அரசு, பெண்களிடையே கருப்பை வாய் (செர்வைக்கல்) புற்றுநோயை ஒழிக்கும் நோக்கில் மாநிலம் முழுவதும் விரிவான தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக HPV தடுப்பூசி, ஆரம்ப கட்ட பரிசோதனை (Screening), விரைவான சிகிச்சை மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு திட்டங்கள் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படுகின்றன. இந்த முயற்சி உலக சுகாதார அமைப்பின் (WHO) கருப்பை வாய் புற்றுநோய் ஒழிப்பு இலக்குகளுக்கு ஏற்ப முன்னெடுக்கப்படுகிறது.
மத்திய அரசின் U-WIN இணையதளம் (uwin.mohfw.gov.in) அல்லது பிரத்யேக ஆப் மூலம் எளிதாக முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் நேரடியாக சென்றும் இந்த சேவையைப் பெறலாம்.பெண் குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியத்திற்கு அரசு வழங்கும் ஒரு மிகச்சிறந்த பாதுகாப்பு .