மதுரையில் 108 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா: எம் எல் ஏ விஜய் கல்லாணை அன்பன் பங்கேற்பு
மதுரையில் வெள்ளிக்கிழமை (16.10.2026) அன்றுகாந்தி மியூசியம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் சமுகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம்1 செனாய்நகர் வட்டாரம் மதுரை மாவட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு விஜய் கல்லாணை அன்பன், அவர்கள் தலைமை தாங்கி நூத்தி எட்டு (108,) கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான சீர்வரிசைப் பல்வேறு சத்துமிக்க பொருட்களை வழங்கி வாழ்த்தினார், உடன் கோரிப்பாளையம் பகுதி செயலாளர் சித்திக், மற்றும் 31,வது வார்டு வட்டச் செயலாளர் சுபாஷ் சந்திர போஸ், ஏராளமான கட்சி நிர்வாகிகள், மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பொதுமக்கள், நிகழ்ச்சியில் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர். ஹரிஷ் - மதுரை மாவட்ட செய்தியாளர்