Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

ஐபிஎல் - ஹர்திக் பாண்டியாவை குறிவைக்கும் சிஎஸ்கே? மும்பை வைத்துள்ள புதிய நிபந்தனை என்ன?

ஐபிஎல் - ஹர்திக் பாண்டியாவை குறிவைக்கும் சிஎஸ்கே? மும்பை வைத்துள்ள புதிய நிபந்தனை என்ன?
ஐபிஎல் 2027 சீசனுக்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அந்நியிலிருந்து வெளியேறலாம் என்ற தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரை அணியில் சேர்க்க பல அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியும் தீவிர முயற்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.தகவல்களின்படி, ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்யும் பட்சத்தில், சென்னை அணியில் இருந்து இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே, அதிரடி ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே ஆகியோருடன் ரூ.10 கோடியும் வழங்க வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.ஐபிஎல் 2026 தொடரில் தனது திறமையான ஆட்டத்தால் கவனம் பெற்ற ஆயுஷ் மாத்ரே, மும்பையைச் சேர்ந்த உள்ளூர் வீரர் என்பதால் அவரை மீண்டும் அந்த அணியில் இணைக்க மும்பை இந்தியன்ஸ் விருப்பம் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எதிர்கால நட்சத்திரமாக கருதப்படும் ஆயுஷ் மாத்ரேவை விடுவிக்க சிஎஸ்கே நிர்வாகம் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது.இதையடுத்து, ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலாக டெவால்ட் பிரெவிஸை டிரேடில் வழங்க சிஎஸ்கே முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
மேலும், ரூ.10 கோடியை கூடுதலாக வழங்க முடியாது என்றும், ஹர்திக் பாண்டியாவுடன் சேர்த்து மற்றொரு வீரரையும் மும்பை இந்தியன்ஸ் வழங்க வேண்டும் என்றும் சிஎஸ்கே தரப்பு வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ஹர்திக்குடன் வில் ஜாக்ஸையும் சேர்த்து கேட்க சென்னை அணி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.குஜராத் டைட்டன்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தி ஐபிஎல் கோப்பையை வென்ற அனுபவம் கொண்ட ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவை தங்களது அணியில் இணைக்க பல அணிகள் ஆர்வமாக உள்ளன. எனினும், ஹர்திக் பாண்டியாவின் டிரேட் தொடர்பாக வெளியாகும் தகவல்கள் குறித்து மும்பை இந்தியன்ஸ் அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு