Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 30 செப்டம்பர் 2026 | 14 புரட்டாசி பராபவ வருடம்

ஏ.ஐ. நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை: ரூ.7,000 கோடி இழப்பீடு கேட்கும் ‘தி லெஜண்ட்’ நாயகி!

ஏ.ஐ. நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை: ரூ.7,000 கோடி இழப்பீடு கேட்கும் ‘தி லெஜண்ட்’ நாயகி!

நடிகை ஊர்வசி ரவுடேலாவின் பெயர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.ஐ. நிறுவனம் மீது அவரது தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும், ரூ.7,000 கோடி வரை இழப்பீடு கோரப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தி திரையுலகில் அறிமுகமான ஊர்வசி ரவுடேலா, கன்னடம், பெங்காலி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் லெஜண்ட் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானார். இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த ஏ.ஐ. நிறுவனம் ஒன்று, ஊர்வசி ரவுடேலாவின் பெயர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதாக அவரது தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஊர்வசி ரவுடேலா தரப்பில் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், சட்ட நடவடிக்கைகளுடன் சேர்த்து ரூ.7,000 கோடி இழப்பீடு கோருவது தொடர்பாக மதிப்பீடு நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
மேலும், நடிகையின் பெயர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது அனுமதியின்றி வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏ.ஐ. நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், அதே நேரத்தில் ஒரு தனிநபரின் அடையாளம் மற்றும் புகைப்படங்களை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தும்போது உரிய அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் ஊர்வசி தரப்பு வலியுறுத்தியுள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பிரபலங்களின் பெயர், புகைப்படம், குரல் மற்றும் தோற்றத்தை அனுமதியின்றி பயன்படுத்துவது தொடர்பான சர்ச்சைகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஏ.ஐ. மூலம் உருவாக்கப்படும் போலி வீடியோக்கள் மற்றும் ‘டீப்ஃபேக்’ உள்ளடக்கங்கள் குறித்து திரையுலகைச் சேர்ந்த பலரும் ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளனர். இந்த சூழலில், ஊர்வசி ரவுடேலா தரப்பு முன்வைத்துள்ள ரூ.7,000 கோடி இழப்பீடு கோரிக்கை திரையுலகில் கவனம் பெற்றுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,640
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு