Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 29 செப்டம்பர் 2026 | 13 புரட்டாசி பராபவ வருடம்

“டிமான்டி காலனி 3” படத்தின் மீதான இடைக்காலத் தடையை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்

“டிமான்டி காலனி  3” படத்தின் மீதான இடைக்காலத் தடையை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்

சென்னை ஐகோர்ட், ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை தற்போது நீக்கியுள்ளது. அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி’. ஹாரர் திரில்லர் பாணியில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படம் வெளியானது. அஜய் ஞானமுத்து இயக்கிய இரண்டாம் பாகத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கும் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், ‘டிமான்ட்டி காலனி’ படத்தின் மூன்றாம் பாகம் தற்போது தயாராகியுள்ளது. முதல் இரு பாகங்களுக்குக் கிடைத்த வரவேற்பால், மூன்றாம் பாகத்தின் மீதும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்படத்துக்கு ‘ஏ’ தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement
மேலும், இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகள் ரூ.50 கோடிக்கு ஜீ5 நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தின் இணை தயாரிப்பாளரான விஜயா சுப்பிரமணியன் (வொயிட் நைட் எண்டர்டெயின்மென்ட்), தன்னுடைய கவனத்துக்கு வராமல் ஓடிடி உரிமம் வழங்கப்பட்டதாகவும், தங்களுக்குத் தெரியாமல் படத்தை வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது ‘டிமான்ட்டி காலனி 3’ படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. இதனால், படத்தின் வெளியீட்டுக்கான தடைகள் நீங்கியுள்ள நிலையில், ‘டிமான்ட்டி காலனி 3’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,640
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு