உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவான ‘ஐ.என்.எஸ். நிபுன்’ மீட்புக் கப்பல் கடற்படையில் இணைப்பு
இந்திய கடற்படையின் திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 2-வது ஆழ்கடல் மூழ்குதல் ஆதரவு மற்றும் மீட்புக் கப்பலான ‘ஐ.என்.எஸ். நிபுன்’ அதிகாரப்பூர்வமாக கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், கடற்படை தளபதி அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் முன்னிலையில் இந்த கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனம் இந்த கப்பலை உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கியுள்ளது. இதற்கான அனைத்து சோதனைகளும் கடந்த ஜூலை 30-ம் தேதி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு, கடற்படையிடம் கப்பல் ஒப்படைக்கப்பட்டது. ‘நிஸ்தார்’ வகையைச் சேர்ந்த இந்த ‘ஐ.என்.எஸ்.