Skip to main content
🌤️ —°C
புதன் | 19 ஆகஸ்ட் 2026 | 3 ஆவணி பராபவ வருடம்

உப்புக்கு பதில் சோப்பு பவுடரா? மதிய உணவு சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு

உப்புக்கு பதில் சோப்பு பவுடரா? மதிய உணவு சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு
பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மாணவர்களுக்கு வயிற்று வலி, தலைச்சுற்றல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்தப் பள்ளியில் மொத்தம் 130 மாணவர்கள் உள்ளனர். சம்பவம் நடந்த நாளில் சுமார் 75 மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை கிராம மக்களின் உதவியுடன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது சுமார் 40 மாணவர்கள் பீகார் ஷரீப் மாடல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மதிய உணவில் உப்புக்கு பதிலாக சோப்பு பவுடர் கலந்ததாக மாணவர்கள் உள்ளிட்ட சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதன்படி, உணவில் உப்பு குறைவாக இருப்பதாக மாணவர்கள் தெரிவித்த நிலையில், சமையலர் தவறுதலாக உப்புக்கு பதிலாக சோப்பு பவுடரை எடுத்ததாக கூறப்படுகிறது.உப்பும் சோப்பு பவுடரும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்ததால் இந்தக் குழப்பம் ஏற்பட்டதாகவும், அந்த உணவு மாணவர்களுக்கு பரிமாறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், உணவில் சோப்பு பவுடர் கலந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை மாவட்ட கல்வி அதிகாரி ஹேம்சந்திர் மறுத்துள்ளார். இதுவரை அத்தகைய பொருள் உணவில் கலந்ததற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதற்கான உண்மையான காரணம், மருத்துவ அறிக்கை கிடைத்த பின்னரே தெரியவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் முதலில் அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Advertisement
அங்கு போதுமான மருத்துவ வசதிகள் இல்லாததால், பின்னர் பீகார் ஷரீப் மாடல் மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.மாணவர்களின் உடல்நிலையை நேரில் அறிந்து கொள்ள நாலந்தா சிவில் சர்ஜன் டாக்டர் ஜெய் பிரகாஷ் சிங் மற்றும் எஸ்.டி.ஓ. கிஸ்லய் ஸ்ரீவாஸ்தவா ஆகியோர் மருத்துவமனைக்கு சென்றனர். தற்போது மாணவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உணவு தயாரிக்கப்பட்ட விதம், பயன்படுத்தப்பட்டபொருட்கள்மற்றும்மாணவர்களுக்குஉணவுவழங்கப்பட்டநடைமுறைஉள்ளிட்டவைகுறித்துதகவல்கள்சேகரிக்கப்பட்டுவருகின்றன.விசாரணையில் தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கல்வி அதிகாரி ஹேம்சந்திர் எச்சரித்துள்ளார். இதனால் மாணவர்களின் மருத்துவ அறிக்கை மற்றும் விசாரணை முடிவுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு