Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 28 செப்டம்பர் 2026 | 12 புரட்டாசி பராபவ வருடம்

உத்தராகண்டில் பறக்கும் மின்சார கார் சோதனை வெற்றி

உத்தராகண்டில் பறக்கும் மின்சார கார் சோதனை வெற்றி

உத்தராகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தைச் சேர்ந்த ரவி தம்தா என்ற இளைஞர், ‘ஹபிடா ஸ்கைநெக்ஸ்’ என்ற பெயரில் தனிநபர் பயன்பாட்டுக்கான பறக்கும் மின்சார காரை உருவாக்கியுள்ளார். இந்த வாகனத்தின் முதற்கட்ட மாதிரி சோதனை ஓட்டம் அண்மையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.பெட்ரோல், டீசல், எத்தனால் உள்ளிட்ட எந்தவொரு எரிபொருளும் இல்லாமல் இந்த மின்சார கார் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன ட்ரோன் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த வாகனம், சாலை வசதிகள் இல்லாத செங்குத்தான மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களை எளிதில் சென்றடைய உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வெள்ளம், பனிச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளுக்கும் இந்த வாகனத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.தற்போதைய நிலையில் ‘ஹபிடா ஸ்கைநெக்ஸ்’ மாதிரி வாகனமாக மட்டுமே சோதனை செய்யப்பட்டிருக்கிறது.

Advertisement
பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு முன், பல்வேறு கட்ட சோதனைகளை நிறைவு செய்வதுடன், மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் தேவையான முறையான அனுமதிகளையும் பெற வேண்டியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு