Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 07 அக்டோபர் 2026 | 21 புரட்டாசி பராபவ வருடம்

உங்க அன்பும், ஆதரவும் வேண்டும்” -போர்ச்சுகலில் நடக்கும் கார் பந்தயத்திற்கு ஆதரவு கோரி வீடியோ வெளியிட்ட அஜித்குமார்

உங்க அன்பும், ஆதரவும் வேண்டும்” -போர்ச்சுகலில் நடக்கும் கார் பந்தயத்திற்கு ஆதரவு கோரி வீடியோ வெளியிட்ட அஜித்குமார்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், நடிப்புடன் கார் பந்தயத்திலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். சர்வதேச அளவிலான கார் பந்தயங்களில் தனது அணியுடன் பங்கேற்று வரும் அவர், தற்போது போர்ச்சுகலில் நடைபெற உள்ள போட்டிக்குத் தயாராகி வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு லண்டனில் நடைபெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்திலும் அஜித்குமாரின் அணி பங்கேற்றது. அங்கு நடைபெற்ற மிச்செலின் லீ மான்ஸ் கப் போட்டியை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று தொடங்கி வைத்தார். இந்நிலையில், அஜித்குமாரின் அணி அடுத்ததாக போர்ச்சுகலில் நடைபெற உள்ள கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ளது. வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறும் இந்தப் போட்டியில் தங்களது அணி களமிறங்க உள்ளதாக அஜித்குமார் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

Advertisement

அந்த வீடியோவில் ரசிகர்களிடம் பேசிய அவர், தங்களது அணிக்கு தொடர்ந்து அன்பையும் ஆதரவையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அஜித்குமார் வெளியிட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதனிடையே, அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘டேர் டெவில்’ திரைப்படம் அடுத்ததாக வெளியாக உள்ளது. இது அவரது 64-வது படமாகும். ‘மார்க் ஆண்டனி’, ‘குட் பேட் அக்லி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்குகிறார். திரைப்படத்தை அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு