Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 13 அக்டோபர் 2026 | 27 புரட்டாசி பராபவ வருடம்

ஈரோடு மார்க்கெட்டில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.21 ஆயிரத்தை நெருங்கியது!

ஈரோடு மார்க்கெட்டில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.21 ஆயிரத்தை நெருங்கியது!

தமிழகத்தில் மஞ்சள் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் மாவட்டங்களில் ஈரோடு முக்கிய இடம் வகிக்கிறது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய வாய்க்கால்களுக்குத் தண்ணீர் திறக்கப்படுவதன் மூலம், மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. இந்த ஆண்டு எல் நினோ பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் ஈரோடு மாவட்டத்தில் மழைப்பொழிவு குறைந்துள்ளது. இதனால் பவானிசாகர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதன் விளைவாக, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டில் மஞ்சள் சாகுபடி பாதியாகக் குறைந்துள்ளது. சாகுபடி குறைந்துள்ளதுடன், விவசாயிகளிடம் மஞ்சள் இருப்பும் குறைந்துள்ளதால் சந்தையில் அதன் விலை உயரத் தொடங்கியுள்ளது. தற்போது விவசாயிகள் தங்களிடம் உள்ள பழைய மஞ்சளை விற்பனைக்காக மார்க்கெட்டுகளுக்குக் கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் புதிய மஞ்சள் வரத்து அதிகமாக இருந்தபோது, ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.19,779-க்கு ஏலம் போனது.

Advertisement
கடந்த மாத தொடக்கத்தில் ரூ.15,000-க்கு விற்பனையான ஒரு குவிண்டால் மஞ்சளின் விலை, அதன்பிறகு படிப்படியாக அதிகரித்தது. கடந்த 1-ம் தேதி ரூ.17,969-க்கு விற்பனையான நிலையில், நேற்று ரூ.20,799 ஆக உயர்ந்தது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஒரு குவிண்டால் மஞ்சளின் விலை சுமார் ரூ.2,800 அதிகரித்துள்ளது. விரலி மஞ்சள் ரூ.20,799-க்கு விற்பனை ஈரோடு கூட்டுறவு விற்பனை நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தில், ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் குறைந்தபட்சம் ரூ.19,419-க்கும், அதிகபட்சம் ரூ.20,799-க்கும் விற்பனையானது. கிழங்கு மஞ்சள் ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.17,849-க்கும், அதிகபட்சம் ரூ.19,011-க்கும் ஏலம் விடப்பட்டது. ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், ஈரோடு கூட்டுறவு விற்பனை நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஏலத்துக்கு மொத்தம் 2,425 மூட்டை மஞ்சள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டது. இதில் 1,435 மூட்டைகள் மட்டுமே விற்பனையாகின. இதற்கிடையே, கோபி கூட்டுறவு விற்பனை நிலையத்துக்கு நேற்று மஞ்சள் வரத்து இல்லை.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு