Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 04 செப்டம்பர் 2026 | 19 ஆவணி பராபவ வருடம்

இந்திய விமானப் படையில் விருப்ப ஓய்வு... தனியார் பயணிகள் விமானத்தை இயக்கும் அபிநந்தன்

இந்திய விமானப் படையில் விருப்ப ஓய்வு... தனியார் பயணிகள் விமானத்தை இயக்கும் அபிநந்தன்

இந்திய விமானப் படையில் 22 ஆண்டுகள் பணியாற்றிய விங் கமாண்டர் அபிநந்தன், விருப்ப ஓய்வு பெற்றுள்ள நிலையில், தற்போது தனியார் விமான நிறுவனத்தில் இணைந்துள்ளார். இனி அவர் பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் நடவடிக்கையாக, இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின.இந்த நடவடிக்கையின்போது அபிநந்தன் இயக்கிய மிக்-21 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதையடுத்து அவர் பாராசூட் மூலம் பாகிஸ்தான் பகுதியில் தரையிறங்கினார். அப்போது அங்கிருந்த சிலர் அவரை தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.அந்த சூழ்நிலையிலும் அபிநந்தன் வெளிப்படுத்திய துணிச்சலும் தேசப்பற்றும் இந்திய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இதனால் அவர் இந்தியர்களால் ஒரு வீரராக போற்றப்பட்டார்.பின்னர் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட அபிநந்தன் விடுவிக்கப்பட்டு இந்தியா திரும்பினார்.

Advertisement
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், திருப்பனமூர் கிராமத்தைச் சேர்ந்த அவருக்கு, நாட்டிற்கான சேவையை பாராட்டி இந்திய அரசு வீர் சக்ரா விருது வழங்கியது.இந்நிலையில், விமானப் படையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அபிநந்தன், ‘பிளை 91’ என்ற தனியார் விமான நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார். பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான பயிற்சி தற்போது அவருக்கு வழங்கப்பட்டு வருகிறது.கோவா-ஐதராபாத் வழித்தடத்தில் விமானத்தை இயக்கி அவர் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். பயிற்சி நிறைவடைந்த பிறகு, ஏ.டி.ஆர். 72-600 ரக பயணிகள் விமானத்தை இயக்கும்பணிஅவருக்குவழங்கப்படும் எனத்தெரிகிறது.இதுகுறித்துபிளை91நிறுவனத்தின்செய்தித்தொடர்பாளரிடம்கேட்டபோது,ஊழியர்களின்தனிப்பட்டதகவல்கள்ரகசியமாகபாதுகாக்கப்படுவதால், இதுபற்றி கருத்து தெரிவிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு