Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

இந்திய அணியின் சவாலை நிச்சயம் கில் சமாளிப்பார்: ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

இந்திய அணியின் சவாலை நிச்சயம் கில் சமாளிப்பார்: ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில், அணிக்கு எதிராக உள்ள சவால்களை திறம்பட எதிர்கொள்வார் என ஆஸ்திரேலிய முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹேடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, 2025-ம் ஆண்டு இங்கிலாந்து தொடருக்கு முன்பு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பு சுப்மன் கில்லிடம் வழங்கப்பட்டது. கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு பேட்டிங்கில் கில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். இருப்பினும், அணியின் முடிவுகள் தொடர்ந்து ஒரே மாதிரியானதாக இல்லை. இந்த சூழலில் கில் குறித்து மேத்யூ ஹேடன் கூறியதாவது: “பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டால், இந்திய அணிக்கு கில் சிறந்த கேப்டனாக செயல்படுகிறார் என நான் கருதுகிறேன்.
Advertisement
அவருக்கு முன்னால் பல்வேறு சவால்கள் உள்ளன. குறுகிய வடிவிலான கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளைப் பெறும் அளவுக்கு வலுவாக உள்ளது. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் சில முக்கியமான பகுதிகளில் இந்திய அணி முன்னேற்றம் அடைய வேண்டியுள்ளது.இந்த சவால்களை கில் நிச்சயம் சிறப்பாக எதிர்கொள்வார் என நம்புகிறேன். அவர் திறமையான இளம் வீரர் மட்டுமல்ல; நல்ல தலைவராகவும் இருக்கிறார். அவரைச் சுற்றி திறமைமிக்க வீரர்களைக் கொண்ட வலுவான அணியும் உள்ளது. அந்த அணியில் உள்ள இளம் வீரர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் தங்களது முழுத் திறனையும் வெளிப்படுத்துவது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு