Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 19 செப்டம்பர் 2026 | 3 புரட்டாசி பராபவ வருடம்

இடைத்தேர்தல் பரப்புரைக்காக தவெக சார்பில் 40 நட்சத்திர பேச்சாளர்கள் அறிவிப்பு

இடைத்தேர்தல் பரப்புரைக்காக தவெக சார்பில் 40 நட்சத்திர பேச்சாளர்கள் அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்ளிட்ட 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 28 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. இதேபோல் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் 22 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் இன்று (சனிக்கிழமை) ஆகும். இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

Advertisement
ஏற்கனவே பல்வேறு வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில், இறுதி பட்டியல் வெளியான பிறகு தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 40 நட்சத்திர பேச்சாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் முதல்-அமைச்சர் விஜய், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, காதர் மொய்தீன் உள்ளிட்ட 40 பேர் இடம்பெற்றுள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு