Skip to main content
🌤️ —°C
வியாழன் | 27 ஆகஸ்ட் 2026 | 11 ஆவணி பராபவ வருடம்

ஆன்லைன் மது விற்பனை விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

ஆன்லைன் மது விற்பனை விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க  சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
டாஸ்மாக் கடைகளில் ஆன்லைன் வாயிலாக மதுபானங்களை வாங்கும் வசதியை அறிமுகப்படுத்தி, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஆன்லைன் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் தலைவர் கே.பாலு சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், ஆன்லைன் மூலம் மதுபானம் வாங்க 21 வயது நிரம்பியிருக்க வேண்டும் என டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், பெரியவர்கள் பயன்படுத்தும் ஆன்லைன் கணக்கு அல்லது முகவரியை கொண்டு சிறார்களும் மதுபானங்களை வாங்கும் வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், ரேஷன் கடைகள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் முதியவர்கள் மற்றும் பெண்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாகவும், அவர்களுக்கு இதுபோன்ற ஆன்லைன் வசதிகள் வழங்கப்படாத நிலையில், மதுபானம் வாங்குபவர்களுக்கு மட்டும் இத்தகைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் மதுபான விற்பனையால் தமிழகத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும், வழக்கில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை அதன் செயல்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கே.பாலு கோரியுள்ளார்.இந்த மனு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.கே.பாலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, அரசின் இந்த முடிவு இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என வாதிட்டார்.
Advertisement
மதுபான விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், தமிழக அரசு அமைத்துள்ள குழுவின் விசாரணை வரம்பில், மதுபான விற்பனை மூலம் அரசின் வருவாயை அதிகரிப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்குவதும் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆன்லைன் மதுபான விற்பனை தொடர்பாக வயது வரம்பு முறையாக நிர்ணயிக்கப்படவில்லை என்பதால், இளைஞர்கள் எளிதில் மதுபானங்களை வாங்கக்கூடிய சூழல் உருவாகும் என்றும், எனவே ஆன்லைன் மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.இதையடுத்து, இந்த பொதுநல மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு