Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 05 அக்டோபர் 2026 | 19 புரட்டாசி பராபவ வருடம்

ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள்.. மிரட்டல்களுக்கு திமுக பயப்படாது - உதயநிதி பேச்சு

ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள்.. மிரட்டல்களுக்கு திமுக பயப்படாது - உதயநிதி பேச்சு

சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: “தனது மேஜையில் ஒரு கோப்பு இருப்பதாகவும், அதைத் திறந்து பார்க்க வைக்கும் நிலைக்கு என்னை கொண்டு வராதீர்கள் என்றும் முதலமைச்சர் கூறியிருந்தார். அந்தக் கோப்பை திறந்து பார்த்து, அதில் உண்மை இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் ஏன் தயக்கம் காட்டுகிறீர்கள்? எதற்காக காலதாமதம் செய்கிறீர்கள்? ஜோதிடர் நல்ல நேரம் சொன்ன பிறகுதான் கோப்பை திறப்பீர்களா?நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி விடுக்கப்படும் மிரட்டல்களுக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். ஆளுங்கட்சியினர் எங்களுக்கு பதில் அளிக்கும்போது, உரிய ஆதாரங்கள் இல்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.சட்டமன்றத்தில் சில நேரங்களில் பாடல்கள் பாடப்படுகின்றன.

Advertisement
இதனால் நாங்கள் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா அல்லது சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறோமா என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு உள்ளது.மேலும், அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் கருத்துகள்கூட சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. நான் பேசிய கருத்துகளும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனால் அவைக்குறிப்பில் இருந்து கருத்துகளை நீக்குவதன் நோக்கமே இல்லாமல் போய்விடுகிறது” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு