அரசுப் பணிகளுக்கான நேரடி நியமனம்: வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
30 Oct 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 30 Oct 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அரசுப் பணிகளுக்கான நேரடி நியமனம்: வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு

அரசுப் பணிகளுக்கான நேரடி நியமனம்: வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு

தமிழ்நாடு அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் அதிகரித்து முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞர்களின் கோரிக்கையைப் பரிசீலித்து, அரசுப் பணிகளுக்கான நேரடி நியமனத்தில் தற்போது நடைமுறையில் உள்ள வயது உச்சவரம்பை மேலும் 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த புதிய வயது வரம்பு உயர்வானது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC, BC(M)), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் (MBC & DNC), பட்டியலினத்தவர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் வயது தளர்வுக்கு கூடுதலாக வழங்கப்படும். இந்த வயது உச்சவரம்பு உயர்வு இன்று (30.10.2026) முதல் அமலுக்கு வருகிறது. மேலும், இந்தச் சலுகை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பால், ஏற்கனவே வயது வரம்பை நெருங்கியுள்ள பல்லாயிரக்கணக்கான போட்டித் தேர்வர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறுவார்கள் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.