Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வியாழன் | 10 செப்டம்பர் 2026 | 25 ஆவணி பராபவ வருடம்

அரசு கார்கள் வேண்டாம்: சட்டசபை செயலகத்திற்கு திமுக கடிதம்

அரசு கார்கள் வேண்டாம்: சட்டசபை செயலகத்திற்கு திமுக கடிதம்

தமிழக சட்டசபையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஜோதிமணி, பல எம்.எல்.ஏ.க்களுக்கு கார், உதவியாளர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த முதல்-அமைச்சர் விஜய், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் கார்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனிடையே, அரசு நிதிநிலை நெருக்கடியில் இருப்பதாக முதல்-அமைச்சர் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், திமுகவைச் சேர்ந்த 59 எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு கார்கள் தேவையில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்தார்.

Advertisement
இதனைத் தொடர்ந்து, அரசு கார்கள் வேண்டாம் என்பதை தெரிவிக்கும் கடிதத்தை திமுக எம்.எல்.ஏ. கோவி செழியன், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் வழங்கினார். இந்தக் கடிதத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்று, திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி, நித்தியானந்தன் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு