Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 13 செப்டம்பர் 2026 | 28 ஆவணி பராபவ வருடம்

அரசியலில் நாங்கள் மலை விழுங்கி மகாதேவன்கள்: துரைமுருகன்

அரசியலில் நாங்கள் மலை விழுங்கி மகாதேவன்கள்: துரைமுருகன்

வேலூர் காட்பாடி காந்திநகரில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சட்டசபையில் போலீஸ் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து பேசுவதற்கு பதிலாக சர்க்காரியா கமிஷன், மிசா உள்ளிட்ட பழைய விவகாரங்களை முதல்-அமைச்சர் விஜய் பேசியுள்ளார். அவர் குறிப்பிட்ட சில வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் குற்றவாளிகள் அல்ல என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பின்னரே, அந்த விவகாரங்களில் அரசியல் செய்து வருகிறோம். இதுபோன்ற விஷயங்களை படித்து தெரிந்துகொள்ள முதல்-அமைச்சருக்கு நேரமில்லை என்றும் விமர்சித்தார். திமுக தலைவர் குறித்து முதல்-அமைச்சர் பேசியதற்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருப்பது இதுவே முதல் முறை என்றும் துரைமுருகன் கூறினார். சட்டசபையில் விதிமுறைகளையும் மரபுகளையும் மீறி முதல்-அமைச்சர் செயல்பட்டதாகவும், அதனை சபாநாயகர் தடுக்கத் தவறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதனை அடிப்படையாகக் கொண்டு முதல்-அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தலாம் என்றும் தெரிவித்தார். சட்டசபையில் நடைபெற்ற சம்பவம் மற்றும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படாத விவகாரத்தில் இருந்து கவனத்தை திசைதிருப்பவே கே.என்.நேருவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement
சோதனைக்கான பட்டியலில் தங்களது பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக கூறிய துரைமுருகன், “அரசியலில் நாங்கள் மலை விழுங்கி மகாதேவன்கள்” என்று குறிப்பிட்டார். ஏராளமான வழக்குகளை எதிர்கொண்டவர்கள் தாங்கள் என்றும், தியாகம் என்றால் என்ன என்பது முதல்-அமைச்சருக்கு தெரியாது என்றும் அவர் விமர்சித்தார். 15 நாட்கள் கூட சிறையில் இருந்ததில்லை என்றும், காற்றில் அடித்துச் செல்லப்பட்ட இலை கோபுரத்தை அடைந்தது போன்ற சூழ்நிலையால்தான் அவர் இவ்வாறு பேசி வருகிறார் என்றும் துரைமுருகன் கூறினார். தியாகம் செய்தவர்களுக்கே அதன் அர்த்தம் தெரியும் என்றும், கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து தியாகங்களை செய்து வருபவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த ஆட்சி ஜோதிடர் கூறுவதைப் பின்பற்றி செயல்படுவதாக துரைமுருகன் விமர்சித்தார். முதல்-அமைச்சர் சிறைக்கு செல்லும் வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கு முன்பாக சிறைக்குச் சென்று வரலாம் என ஜோதிடர் கூறியதன் காரணமாகவே புழல் சிறைக்கு சென்று வந்ததாகவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் நடைபெறும் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் திமுக வெற்றி பெறும் என துரைமுருகன் கூறினார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு