Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 28 ஆகஸ்ட் 2026 | 12 ஆவணி பராபவ வருடம்

அமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்து அரசர் அல்ல: சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம்

அமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்து அரசர் அல்ல: சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம்
கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந் தேதி, புதுச்சேரி எழில் நகரில் வசித்து வந்த தனது சகோதரர் மரிய குலோத்தின் வீட்டுக்குள் கதவை உடைத்து அத்துமீறி நுழைந்து, அவரையும் அவரது மனைவி கெரோலினையும் தாக்கியதாக தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் மரிய வில்சன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது, அமைச்சர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், அமைச்சர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.இந்த கோரிக்கைக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என்று கூறுவதற்கு நிதியமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்து அரசர் அல்ல என அவர் தெரிவித்தார். மேலும், நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில்கூட நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, "அமைச்சராக பதவியேற்பதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரானவர், பதவிக்கு வந்த பிறகு மட்டும் ஆஜராக முடியாதா?" என கேள்வி எழுப்பினார்.இதனிடையே, புதுச்சேரி போலீசார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வேளாங்கண்ணி ஆலய கொடியேற்று நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.அதற்கு நீதிபதி, வேளாங்கண்ணி சென்று திரும்பும் வழியில் அமைச்சர் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக முடியாதா என கேள்வி எழுப்பினார்.மேலும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பதற்கு அனுமதிக்க முடியாது என்றும், அமைச்சர் சட்டத்துக்கு மேலானவர் என்ற தகவலை மக்களிடம் கொண்டு செல்ல விரும்பவில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.இதையடுத்து, அமைச்சர் மரிய வில்சன் எந்த தேதியில் புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார் என்பதை தெரிவிக்கும்படி அவரது தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு